'ஒரே நாடு ஒரே தேர்தல்' - ஜன., 8ல் கூட்டுக்குழு

65பார்த்தது
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மசோதா குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் வகையில், அரசியலமைப்பின் 129வது திருத்த மசோதா டிச., 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா 39 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

நன்றி: SansadTV

தொடர்புடைய செய்தி