திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சளி டானிக் குடித்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சி.புதூரைச் சேர்ந்த சின்னபாண்டி (30) - பானுப்பிரியா தம்பதிக்கு பிரணித் (1½) என்ற குழந்தை உள்ளது. கடந்த 26ஆம் தேதி அந்த குழந்தைக்கு சளி பிடித்த நிலையில், டானிக் கொடுத்து தூங்க வைத்துள்ளனர். மறுநாள் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி குழந்தை உயிரிழந்தது. டானிக் குடித்ததன் காரணாமாக தான் குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டுகின்றனர்.