செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கும், வீரபத்திரனுக்கும், சக்திக்கும் செவ்வரளி மலரை சூட்டி வழிபட்டால் நல்லது. செவ்வாய்க்கிழமை வரும் ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மாலையை அணிவித்து, துவரம் பருப்பில் சாதம் செய்து, செம்மாதுளை பழத்தை நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். அஷ்டமி மற்றும் பஞ்சமி திதியில் வராஹி அம்மனுக்கு செவ்வரளி மலரை கொண்டு மாலை சூட்டி பூஜை செய்தால், பண பிரச்சனை தீரும். மற்றவர்களால் ஏற்படும் துன்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.