கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் கட்டப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடியை டிஎஸ்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த சுங்கச்சாவடியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இந்த மறியல் போராட்டம் காரணமாக கடலூர் - சிதம்பரம் இடையே தனியார் பேருந்து சேவை இன்று நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.