பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னை திரும்புகின்றனர். அப்படி இருக்க ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், “ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், பொதுமக்கள் புகார் அளிக்கலாம்” என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். மேலும், 1800 425 6151, 044- 24749002, 044- 26280445, 044-26281611 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.