பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னை திரும்புகின்றனர். அப்படி இருக்க ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரி - சென்னை செல்ல வழக்கமான நாட்களில் ரூ.1,500 வரை வசூல் செய்த நிலையில் தற்போது ரூ.3,800 வசூலிக்கப்படுகிறது. அதேபோல் திருநெல்வேலி - சென்னை செல்ல வழக்கமான நாட்களில் ரூ.1,800 வரை வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.