திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வடக்கு வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் வேலுடன் கூடிய 'ஓம் முருகா' எனும் எழுத்துக்களை கொண்ட நியான் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. கோயில் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் இதே போன்ற 'ஓம் முருகா' எழுத்துக்களை உடைய நியான் மின்விளக்கு கிழக்கு வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் பகுதியிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கொடை ரோடு, திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் வெகு தொலைவில் இருந்தே 'ஓம் முருகா' எனும் ஒளியை கண்டு ரசிக்கலாம்.