ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாராவ் (85) என்பவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பாராவ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றினர். அப்போது, முதியவரின் உடல் அசையவில்லை. அவர் இறந்துவிட்டதாக எண்ணிய உறவினர்கள், வீட்டில் வைத்து இறுதிச்சடங்குகள் செய்து பாடையில் ஏற்றினர். அப்போது, அவர் திடீரென எழுந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.