மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா நிறுவனத்தின் ரோஸ்டர் எலக்ட்ரிக் பைக் பிப்ரவரி 5-ம் தேதி அறிமுகமாகிறது. மூன்று மாடல்களில் எட்டு வகைகளாக இந்த பைக்குகள் வெளியாகிறது. 2.8 வினாடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டும் அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் உச்சபட்ச வேகம் 124 கி.மீ ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ தூரம் வரை ஓட்டலாம். குறைந்தபட்சம் ரூ.99,999ல் இருந்து அதிகபட்சம் ரூ.2,50,000 வரை இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.