ஒவ்வொரு நாளும் தண்ணீருக்காக பெண்கள் உயிரை பணயம் வைக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர், போரிசிவாரி கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் நிலத்தடி நீர் கடுமையாக குறைந்துள்ளது. கிணறுகளில் இருக்கும் நீரையும் ஆபத்தான முறையில் பெண்கள் சேகரிக்கின்றனர். இதனால் குழந்தைகளை கூட கவனிக்க இயலாமல் வருத்தப்படும் தாய்மார்கள் இந்த விஷயத்துக்கு உரிய தீர்வு வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.