ஐயோ காது போச்சே!! ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை

83பார்த்தது
கர்நாடகா மாநிலத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட, அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹார்னைப் பயன்படுத்திய பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர். மற்ற வாகன ஓட்டுநர்களும், மக்களும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹார்னால் ஏற்படும் அசௌகரியத்தை உணரும் பொருட்டு, ஓட்டுநர்களை வாகனத்தின் முன் உட்கார வைத்து ஏர்ஹார்னைத் தொடர்ந்து ஒலித்தனர். சரியான தண்டனை என பொதுமக்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி