அமைச்சர்களை அதிகாரிகள் மதிக்க வேண்டும்: துரைமுருகன் காட்டம்

76பார்த்தது
அமைச்சர்களை அதிகாரிகள் மதிக்க வேண்டும்: துரைமுருகன் காட்டம்
அமைச்சர்களை அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் காட்டமாக தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது துறை சார்ந்த அதிகாரிகள் யாருமே இல்லை என சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன் புகார் கூறியதற்கு அவர் பதில் அளித்தார். அரசு அதிகாரிகளிடம் முறையாக அறிவுறுத்தப்பட்டது, ஆனால் யாரும் இன்று சட்டப்பேரவைக்கு வரவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி