கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு - நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல்

53பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அருகே இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கோயிலில் பட்டியல் சமூக மக்கள் நுழைய அனுமதி மறுக்கும் இடைநிலை சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காடையாம்பட்டி வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதே இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. மோதலில் பட்டியல் சமூக மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.ஆனாலும் காவல்துறையினர் பட்டியிலன மக்களின் தெருவில் நுழைந்து வீடுகளில் இருந்தவர்களைத் தகாத வார்த்தையால் பேசி அவர்களின் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தகைய செயல் காவல்துறையில் புரையோடி இருக்கக்கூடிய சாதிய வன்மத்தையே வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி