பணி நிரந்தரம் செய்வது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தர பணியிடங்களை உருவாக்குவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 500 செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே சென்னை டிபிஐ வளாகத்தில் சம ஊதியம் வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.