தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர் கைது

23036பார்த்தது
தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வினிஷா (24) என்பவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காதலன் மூலம் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானார். இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி தனக்குத்தானே வீட்டில் பிரசவம் பார்த்தார். அப்போது, குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதன் காரணமாக செவிலியர் மீது மாம்பலம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர். வினிஷாவின் காதலனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி