கோயம்புத்தூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சாட்டை அடியை முருகனுக்கு சமர்ப்பித்துள்ளேன். லண்டன் சென்று படித்து வந்த பிறகு அரசியலில் நிறைய புரிதல் வந்துள்ளது. இனி எல்லா மேடைகளிலும் திமுக-வை தோலுரித்துக் காட்டுவோம். காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காக்கி உடையின் மீது தான் என் கோபம். அனைத்து அரசியல் பதவிகளும் வெங்காய பதவிகளே” என்றார்.