தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டியில், “2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1200 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை அடங்கிய பகுதியில் தேவைக்கேற்ப கூடுதலாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டில் பாகம் எண், வாக்காளர் வரிசை எண் உள்ளிட்டவை பிரதானமாக இருக்கும்படி தகுந்த வகையில் வடிவமைக்கப்படும்" என்றார்.