இந்திய தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை இட்டு இருந்தது. அதில், வரும் மார்ச் மாதம் 12ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், மார்ச் 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம் என்றும், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாள் என்றும், மே மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வாட்சாப் போன்ற சமூக வலைதள பக்கத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது என்றும், இதனை யாரும் நம்ப வேண்டாம். உண்மையான தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.