டெலிவரி நபர்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் டிஜிபி 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்விக்கி, சோமேட்டோ, டன்சோ, செப்டோ போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெலிவரி ஊழியர்கள் போல் உடையணிந்து கொண்டு நடித்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக மனுதாரர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.