இங்கிலாந்த் தொழில்நுட்ப பிராண்டான நத்திங், அதன் புதிய ஸ்மார்ட்போனான நத்திங் போன் 3 இன் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஜூலை 1, 2025 அன்று உலகளவில் அறிமுகமாக உள்ளது. 12ஜிபி/256ஜிபி வகை போன் 3-ன் விலை சுமார் ரூ.68,259 ஆகவும், 16ஜிபி/512ஜிபி வகை போன் ரூ.76,802 ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற நிறுவன மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. Android 15-ஐ கொண்ட இந்த போனில் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.