அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மஸ்க் குறித்து ட்ரம்ப் கூறுகையில், “டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கிடம் பேசுவதற்கு நான் தயாராக இல்லை. அவர்தான் மீண்டும் என்னிடம் பேச விரும்புகிறார். அவருடனான உறவு முடிந்து விட்டது. அதை புதுப்பிக்க நான் விரும்பவில்லை" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.