நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் மாக்ன்ஸ் கார்ல்சனை உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் தோற்கடித்துள்ளார். இதில் குகேஷ், நார்வேயின் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட கார்ல்சனே ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், இறுதியில் குகேஷ் வெற்றிப் பெற்றார். இதனால், ஏமாற்றம் அடைந்த கார்ல்சன், மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.