நார்வே செஸ் 2025 தொடரின் சாம்பியன் பட்டத்தை நூலிழையில் குகேஷ் தவறவிட்டுள்ளார். இதனால் அவர் மனமுடைந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசி போட்டியில் ஃபாபியனுடன் தோல்வியை சந்தித்ததால் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தார். வெற்றி பெற்றிருந்தால் 3 புள்ளிகள் பெற்று 17.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருப்பார். இந்த நார்வே செஸ் போட்டியில், 7வது முறையாக மேக்னஸ் கார்ல்சன் பட்டம் வென்றார்.