வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டதாக பரவும் தகவலுக்கு இந்தியன் ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயிலில் உணவு திணிப்பு என சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், காலை உணவு உட்பட அனைத்து வேளை உணவுகளிலும் அசைவ உணவுகள் பட்டியலிடப்பட்டு வழங்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மை இல்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.