கர்நாடகாவிடம் பேசி எந்த பயனும் இல்லை: அமைச்சர் ரகுபதி

293பார்த்தது
கர்நாடகாவிடம் பேசி எந்த பயனும் இல்லை: அமைச்சர் ரகுபதி
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், கர்நாடகாவிடம் நாம் பேசி எந்த பயனும் இல்லை, அதனால் தான் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடகாவிடம் பேசி முடிவுக்கு வர முடியாததால்தான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றோம்' என்றார்.

தொடர்புடைய செய்தி