டோவினோ தாமஸின் 'நடிகர்' பட டீசர் வெளியீடு

57பார்த்தது
தென்னிந்தியளவில் கவனம்பெற்ற நடிகராக இருப்பவர் டோவினோ தாமஸ். மாயநதி, மின்னல் முரளி, 2018, 'தள்ளுமலா' உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். தற்போது, நடிகர் லாலின் மகனும் இயக்குநருமான லால் ஜூனியர் இயக்கத்தில் 'நடிகர்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். முதலில் இப்படத்திற்கு 'நடிகர் திலகம்' எனப் பெயரிட்டிருந்தனர். ஆனால், சில காரணங்களால் திலகத்தை நீக்கிவிட்டனர். இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி