மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு பின் உதவித்தொகையை அறிவித்த மாநிலங்களில் அதிக தொகையை அறிவித்துள்ளது. இந்நிலையில், வரும் 2025-26 பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000 இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.