30 ஆண்டுகள் பழமையான கம்பி வடம் சார்ந்த தொலைக்காட்சி சேவை வலையமைப்புகள் சட்டத்தினை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சட்டம் youtube, இன்ஸ்டாகிராம், X போன்ற தளங்களில் செய்தி நிகழ்வுகளை சுயமாக உருவாக்கி வெளியிடுபவர்கள் மீது கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஊடகங்களில் செய்தி நிறுவனங்கள் என்ற பெயரில் போலியான செய்திகள் வெளியிடுபவர்களுக்கு இந்த சட்டம் மூலம் இனி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.