மல்லி விதைகளை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். முதல் நாள் இரவே இந்த விதைகளை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மண்பானையில் மண்ணை நிரப்பி இந்த மல்லி விதைகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மண்ணை போட்டு மூடி விடவும். தினமும் செடிக்கு தண்ணீர் தெளித்து வரவேண்டும். அதிக வெயில் தேவையில்லை. நிழலில் வைத்து கூட வளர்க்கலாம். இவ்வாறு செய்தால் 10 நாட்களில் வீட்டிற்கு தேவையான கொத்தமல்லி செடி தழைத்து வளரும்.