சிகிச்சைக்கு பணமில்லை - தம்பதி தற்கொலை

92063பார்த்தது
சிகிச்சைக்கு பணமில்லை - தம்பதி தற்கொலை
நாமக்கல் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட தம்பதியர் சிகிச்சைக்கு பணமில்லாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வரகூர் தாட்கோ காலனியில் வசித்து வந்தவர் பெரியசாமி (55), அவரது மனைவி சாந்தா (52). இந்த நிலையில், உடல்நலம் பாதித்த இருவரும் மாதந்தோறும் அதிகளவு மருத்துவ செலவு செய்து வந்துள்ளனர். இதனால் அதிக கடன் வாங்கி செலவு செய்து வந்த நிலையில், மகனுக்கு பாரமாக இருப்பதாக கருதி இருவரும் வீட்டில் இன்று காலை தற்கொலை செய்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி