அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சியில் மெகா தலைவர் இல்லாததால் குழப்பம் நிலவுவதாக காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'பள்ளி மற்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த மக்களுக்கு அச்சம் ஊட்டக்கூடிய தாக்குதலுக்கான விளக்கத்தை அரசு கட்டாயம் அளிக்க வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சியில் மெகா தலைவர் இல்லாததால் குழப்பம் நிலவுகிறது. அது இயற்கை தான்' என்றார்.