நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 7வது நாளாக இன்றும் (ஏப்., 16) ரூ.4.15 ஆக தொடர்கிறது. இதனிடையே முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி நடப்பதாக, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) மீது சிறு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரு நாளைக்கு சுமார் 5 கோடி முட்டைகள் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், விலை நிர்ணயம் தொடர்பாக சிறு பண்ணையாளர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை எனக்கூறி, சங்க அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டிருந்தனர்.