கீழடியின் வரலாறு குறித்து அதிகமான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை என்றும் அதை மேற்கொண்டால் தான் அங்கீகரிக்க முடியும் எனவும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள வெங்கடேசன் எம்.பி. "கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாட்டின் கோமியம் இப்போது கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே" என்றார்.