பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "எந்த கொண்டாட்டமும் மனித உயிருக்கு நிகரானது அல்ல என்பதை இந்த சோகமான சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. பொது நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் தகுந்த முறையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். மனித உயிர்கள்தான் எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.