திமுகவுக்கு மாற்று அணி உருவாகவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்றாக இன்னமும் ஒரு கூட்டணி உருவாகவில்லை என்றும் பாஜகவின் வலையில் அதிமுக சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சிக்கான சூழல் தற்போது இல்லை என்றும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளை விழுங்கி வளர்வதுதான் பாஜகவின் யுக்தி என்றும் சாடியுள்ளார்.