மணிப்பூரில் தற்போது முதலமைச்சர் பைரன் சிங் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. பீகாரிலும், மத்தியிலும் பாஜகவுக்கு ஆதரவுடன் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மணிப்பூர் ஆட்சிக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லையென்றாலும் பாஜக இதனை சற்று கவனமாகவே கையாள நினைக்கும்.