கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மாநில அதிகாரிகளுக்கு உறுதுணையாக
தேசிய கூட்டு பரவல் மீட்புக் குழுவை (NJORT) அனுப்புவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் (NCDC) உள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (IDSP) மத்திய கண்காணிப்பு பிரிவு விரைந்து நடவடிக்கை எடுக்க உள்ளது. பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.