நீலகிரி: சுற்றுலாப் பயணிகள் குறைவாக காணப்பட்ட அரசு தாவரவியல் பூங்கா..
உதகையில் தொடர்மழை மற்றும் காலநிலை மாற்றத்தால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறை நாளான இன்று(அக்.20) உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. பூங்காவிற்கு வந்திருந்த ஒரு சிலர் இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.