மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் உதகை அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட அறிவியல் ஆசிரியர் செந்தில் குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாரிடம் புகார் கூறியுள்ளார். புகாரின் பேரில் உதகை ஊரக காவல் ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.