அழியும் நிலையில் உள்ள சிட்டுக்குருவிகளை காப்பதற்காக ஆண்டுதோறும் உலக சிட்டுக் குருவிகள் தினம் மார்ச் 20 ல் கொண்டாடப்படுவதன் மூலம், மக்கள் மத்தியில் சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு, பறவைகள் ஆர்வலர்களும் தங்களது பங்களிப்பை செயல்படுத்த, இந்த நாளை முக்கிய நாளாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இயற்கை உரத்தில் இருந்து மாறி ரசாயன உரங்களை பயன்படுத்தி தானியங்களை விளைவித்ததாலும், ஓட்டு வீடுகளின் இடைவெளியில் கூடுகட்டி வாழ்ந்த சிட்டுக் குருவிகள் அடுக்குமாடி குடியிருப்புகளால் வாழ்விடம் குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதால் இவற்றை காப்பதற்காக உலக சிட்டுக் குருவிகள் தினத்தில் பொதுமக்களும் விவசாயிகளும், மற்றும் பறவைகள் இன ஆர்வலர்களும் முயற்சி செய்தால் சிட்டுக் குருவிகளை அழிவின் நிலையில் இருந்து காக்க முடியும் என்கின்றனர். சிட்டுக் குருவிகளுக்கென்று சிறிய பெட்டிகள், பாணைகணை ஆங்காங்கே அமைத்து இவற்றிற்கு உணவு தண்ணீர் அளித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.