உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பதற்கு முன், அதன் இறுதி கட்டப் பணிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பதை முன்னிட்டு, அதன் இறுதி கட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.