கிறிஸ்மஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள். உதகை-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவிந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த வாகனங்களில் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிறிஸ்மஸ் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக நேற்று முதலே உதகையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். இதன் காரணமாக உதகை-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பைன் ஃபாரஸ்ட் முதல் தலைகுந்தா, ஹெச்பிஎப், பிங்கர் போஸ்ட் கோத்தகிரி, தொட்டபெட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர்ந்து வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
உதகை-குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக உதகையில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.