சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றன்ர்

74பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால், இயற்கை எழிலுடன் அனைத்து அணைகளும் முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிவதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றன்ர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள், ஈரோடு, திருப்பூர் , கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாசனத்திற்கு மிக முக்கியப் பங்களிப்பு செய்துவருகின்றனர். கடந்த ஜூன், ஜூலை , ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி ,
எம்ரால்டு, பைக்காரா, குந்தா உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு தற்போது தேவைக்கேற்ப நாள்தோறும் 816 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் அண்டை மாவட்டத்தின் விவசாயத் தேவையைத் தீர்க்கும் வகையில் அணைகளிலிருந்து உபரிநீரும் வெளியேற்றப்பட்டுவருகிது. இதனால், மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பசுமை நிறைந்த இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. இதனை, நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி