குன்னூர் அருவங்காடு ஜகதளா பகுதியில் பகுதியில் அதிகாலையில் சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்த வளர்ப்பு நாயை தூக்கி சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.