மலைத் தோட்ட காய்கறிகளில் ஒன்றான பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு

83பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் முதுகெலும்பாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலைதோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பல ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு விளைவிக்கக் கூடிய காய்கறிகளை மேட்டுப்பாளையம் மார்க்கெட் சந்தைக்கும், உதகை மார்க்கெட் சந்தைக்கு கொண்டு வந்து மொத்த கொள்முதல் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி முதல் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மழை தோட்ட காய்கறிகள் விவசாயம் செய்துள்ள விளைநிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை அறுவடை செய்து உதகை மார்க்கெட் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் உதகை மார்க்கெட் மொத்த விற்பனை கொள்முதல் நிலையத்திற்கு பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் அறுவடை செய்யப்பட்ட பீன்ஸ் கடந்த நாட்களில் கிலோ 50-ரூபாய் முதல் 60 -ரூபாய்க்கு விற்பனையானது தற்போது பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் மார்க்கெட் சந்தையில் 100 -முதல் 150 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி