குடிநீர் திட்டத்தை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர்...

76பார்த்தது
5. 45 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் குறைந்தபட்ச தேவை திட்டத்தின் கீழ் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் நிதியின் மூலம் மேல் குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட கடைக்கோடி கிராமமான கிண்ணக்கொரை கிராமத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் திட்டத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை ஒன்றியம், மேல் குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்பது குடியிருப்புகளுக்கான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் வராகப்பள்ளம் நீரோடையை நீர் ஆதாரமாகக் கொண்டு திட்டம் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி