உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்தார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக சுமார் 15, 000 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுகள் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் நாட்டின் பிற மாநிலங்களான கொல்கத்தா , காஷ்மீர் பஞ்சாப், பூனே , போன்ற இடங்களில் இருந்து இன்கோ மேரி , கோல்ட் பிரெஞ்ச் , மேரிகோல்டு ஆஸ்டர் வெர்பினா, லூபின் போன்ற 60 வகைகளில் பல்வேறு வகையான மலர் விதைகள் பெறப்பட்டு
சுமார் 500 லட்சம் வண்ண மலர் செடிகள் இரண்டாவது மலர் கண்காட்சிக்காக மலர்ப்பாத்திகளில் நடவுப் பணியும் 15, 000 மலர் தொட்டிகளில் டெய்சி, சால்லியா, டேலியா, போன்ற முப்பது வகையான மலர் செடிகளை நடவும் பணி இன்று துவங்கியது.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.