நீலகிரியில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவல் துறையினருக்கு அதி நவீன நிழற்குடைகள்.
நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது சமவெளிப் பகுதிகளுக்கு இணையாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு மதுரை ams எனும் நிறுவனம் போக்குவரத்து காவலர்கள் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அதிநவீன நிழற்குடைகளை வழங்கி உள்ளனர். இந்த நிழற்குடையிள் இரு காவலர்கள் அமர்ந்து இளைப்பாறும் விதமாக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 12 நிழற்குடைகள், பேரிகார்டுகள் மற்றும் 50 எச்சரிக்கை பலகைகளை நீலகிரி மாவட்ட காவல்துறைக்கு இந்த நிறுவனம் வழங்கியது.
இந்த நிழற்குடைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.