டெம்போ ட்ராவலர் விபத்து: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

573பார்த்தது
கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட டெம்போ ட்ராவலர் ஒன்று நீலகிரி மாவட்டம் ரோஸ் கார்டனிலிருந்து அலங்கார் தியேட்டர் வழியாக கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அப்போது ட்ராவலர்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கார், ஆட்டோக்கள் மீது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயம் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர், டெம்போ ட்ராவலர் ஓட்டுநர்களுக்கு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெம்போ ட்ராவலர் விபத்து காட்சியானது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவானது. பதைபதைக்கும் காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி