பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

52பார்த்தது
பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
குன்னூர், பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில் மாணவர்களிடையே முழுமையான நல்வாழ்வை மேம்படுத்த முயற்சியில் " உடல்நலம் மற்றும் ஒருங்கிணைப்பு " என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டினை நடத்தினர். மாணவி சினேகா வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சந்தோஷ்குமார் , சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினராக பாரம்பரிய அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர் ஏ சி யு முஹம்மது ரமீஸ் சிறப்புரையாற்றினார். அந்த நிகழ்வில் மன அழுத்தத்தை நிர்வாகிப்பதற்கும், சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், அவர்களின் தனிப்பட்ட மற்றும் கல்வி வாழ்க்கையை ஒருங்கிணைப்பதற்கும், நடைமுறை யுக்திகளை மாணவர்கள் கையாள வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர்கள் தன்யா , பிரியங்கா ராஜாமணி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்வை முன்னின்று நடத்தினர். இறுதியாக மாணவி ரித்தியா பிரின்சி நன்றியுரையற்றினார்.

தொடர்புடைய செய்தி